சங்கத்தின் நோக்கம் மற்றும்  செயல்பாடுகள்:-

சேலம் மாவட்ட வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு பயிற்சி வகுப்புகள், தொழில் சார்ந்த கண்காட்சி, புதிய கேமராக்களின் அறிமுகம் மற்றும் அதன் பயன்பாட்டின் விளக்க வகுப்புகள், கேமரா உபகரணங்கள் வாங்குவதற்கான ஆலோசனை மற்றும் கடன் உதவிக்கான வழிமுறைகள் செய்து கொடுத்து  சங்க உறுப்பினர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய திட்டங்கள் வகுத்தும் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கியும் சங்க உறுப்பினர்களின் தொழில் சார்ந்த இடையூர்களை கலைந்து அவர்கள் வாழ்வில் வளர்ச்சியை ஏற்படுத்த உறுதுணையாக உழைத்து வருகிறோம்.

 

பொதுப்பணிகள் :

சுற்றுசூழல் பாதுகாகாப்பு  ,உலகம் வெப்பமாதலை தடுக்க மரங்களை நட்டு பொதுமக்களிடையே துண்டுபிரசுரம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம், மேலும் போக்குவரத்து காவல்துறை, வட்டார போக்குவரத்து துறையுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணியும் ,மற்றும் காவேரி நதிநீர் பிரச்சனை, ஜல்லிக்கட்டுபோன்ற நமது கலாச்சாராத்தை தடுப்பதை எதிர்த்து உண்ணாவிரதம் ,ஆர்ப்பாட்டம் ,பேரணி போன்ற அறவளி போராட்டங்கள் நடத்தி உள்ளோம் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள், பெரியோர்கள் இல்லத்துக்கு சென்று அவர்களுக்கு தேவையான உணவு, உடை உபகரணங்கள் வழங்கி சேலம் மாவட்ட அனைத்து வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் சங்கமானது பொது பணிகள் செய்து வருகிறது.

 

சங்கம் உதயம்

சேலம் மாவட்ட அனைத்து வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் சங்கமானது  Labour Department of Tamilnadu அதன் கீழ்  2010 ஆண்டு பதிவுசெய்து (Reg.No:1358/2010) துவக்கப்பட்டது