பொதுக்குழு மற்றும் குடும்பவிழா 2011 - 11/08/2017

சுமங்கலி திருமண மண்டபத்தில் 21.08.2011  தேதியில் பொதுக்குழு மற்றும் குடும்ப விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக  சிறு துறைமுகம், நெடுஞ்சாலை துறை அமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் திரு. செல்வராஜ் MLA அவர்கள் திரு. வெங்கடாஜலம் MLA அவர்கள் கலந்து கொண்டு  மூத்த கலைஞர்களை வாழ்த்தியும் ,புகைப்பட கண்காட்சியை பார்த்து ரசித்து கலைஞர்களை பாராட்டினார். நமக்கான தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்ற நமது கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் கூறி செய்து தருவதாக உறுதி அளித்தார். மேலும் திரைப்பட இயக்குனரும், கேமராமேனுமான திரு. குகன் அவர்கள்,TVதொகுப்பாளினி செல்வி ராதிகாஆகியோர் கலந்து கொண்டார்கள், இவ் விழாவில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் வாங்கிய நமது உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது