நமது சங்கத்தின் SDAVPA பொதுக்குழு, குடும்பவிழா, புகைப்பட போட்டி ஆகியவை கொண்ட முப்பெரும் விழாவானது 19-8-2018 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதற்கு தலைவர் K.நாகராஜன் அவர்கள் தலைமை உரையாற்றினார். செயலாளரும், பொருளாளரும் தங்களது கடந்த ஆண்டின் செயல்பாட்டை செயல் அறிக்கையாக சமர்பித்தனர்.
சிறப்பு அழைப்பளாராக சேலம்மேற்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் திரு. D.தாமோதரன் அவர்கள், திருச்சி மாவட்ட வீடியோ புகைப்பட கலைஞர்கள் நலக் கூட்டமைப்பின் ஆலோசகர் திரு. S.M.P.வீரமணி அவர்கள் மற்றும் Nizhal Pathiyam Film Institute, Pricipal திரு, நிழல் திருநாவுக்கரசு அவர்கள் கலந்து கொண்டு நமது Website துவக்கி ஆலோசனைகளை வழங்கி சிறப்பு செய்தார்கள். ஆண்தேவதை திரைப்படத்தின் நட்சத்திர நாயகன் S.கவின் பூபதி, சேலம் மாவட்டத்தை சேர்ந்த நமது தொழில் சார்ந்த பயிற்சிகளை அளித்துவரும் கெளரி சங்கர் மற்றும் பாவை பாலு அவர்களை வாழ்த்தி கெளரவ படுத்தப்பட்டது. புகைப்பட போட்டியில் பங்குகொண்டவர்களில் முதல் பரிசை வெள்ளக்கோவில் தங்கராஜ், இரண்டாம் பரிசை திருச்செங்கோடு
பாக்கியராஜ், மூன்றாம்பரிசை சேலம் ஹரிஷ் அவர்கள் பரிசுபெற்றனர்.போட்டியில் பங்குகொண்ட அனைவருக்கும் பாராட்டி சான்றிதழ் வழங்கி குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான (ஆண்கள்- பெண்கள்) விளையாட்டு போட்டிகள் நடத்தி அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது,